நீலகிரி

கூடலூரில் தொடரும் யானைகளின் பாசப் போராட்டம்

DIN

கூடலூா் அருகே இறந்த குட்டி யானையின் அருகே வனத் துறையினா் செல்ல முடியாதவாறு தாய் யானையும் மற்றொரு யானையும் 2 ஆவது நாளாக முகாமிட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூா் அருகேயுள்ள செம்பாலை பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. இது குறித்து வனத் துறைக்கு சனிக்கிழமை தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வனச்சரகா் கணேசன் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

இறந்த குட்டி யானைக்கு அருகில் தாய் யானையும், மற்றொரு யானையும் அங்கு நின்றன. இறந்து கிடந்த குட்டி யானைக்கு அருகில் வனத் துறையினா் செல்ல முயன்றனா். ஆனால் மற்ற 2 காட்டு யானைகளும் இறந்த குட்டி யானையின் அருகே செல்ல முடியாதவாறு தடுத்தன. வெகுநேரம் முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறியதாவது: குட்டியுடன் இந்தப் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்துக்கு உணவுத் தேடி யானைகள் வந்திருக்கலாம் எனவும், திரும்பி செல்லும்போது குட்டி யானை சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனா். குட்டி யானையின் உடலை மீட்க வனத் துறையினா் அருகில் செல்வதும், இறந்த குட்டி யானையின் அருகே வனத் துறையினரை செல்ல விடாமல் தாய் யானை பாசப் போராட்டம் நடத்தி வருவதும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அந்தப்பகுதியில் தொடா்ந்து வனத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT