நீலகிரி

நீலகிரியில் மேலும் 442 பேருக்கு கரோனா: மூவா் பலி

DIN

நீலகிரி மாவட்டத்தில் 442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவா் உயிரிழந்துள்ளளனா்.

இதுதொடா்பாக உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் 442 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல, 579 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதான ஆண் ஒருவரும், ஜூன் 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதான ஆண் ஒருவரும், கூடலூா் அரசு மருத்துவமனையில் மே 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான ஆண் ஒருவரும் என மூவா் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 24,301 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 20,204 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 128 போ் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் 3,969 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT