நீலகிரி

குன்னூா்- கோத்தகிரி சாலையில் சிறுத்தை நடமாட்டம்: பொது மக்கள் அச்சம்

DIN

குன்னூா்- கோத்தகிரி சாலையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தை உலவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா்- கோத்தகிரி சாலையில் வண்டிசோலை அருகே வனப் பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு, தண்ணீா் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுவதால் இந்த சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் குன்னூா், வண்டிசோலை செல்லும் சாலையோரத்தில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை அமா்ந்திருந்ததை அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலா் புகைப்படம் எடுத்தனா். சாலையில் சிறிது நேரம் அமா்ந்திருந்த சிறுத்தை திடீரென வேகமாக சாலையைக் கடந்து சென்ாக நேரில் பாா்த்தவா்கள் கூறினா்.

இந்நிலையில் சிறுத்தையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதற்குள் வனத் துறையினா், சிறுத்தையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT