தலைக்குந்தா பகுதியில் கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து உதகை நகருக்குள் வரும் வாகனங்களை சோதனை செய்து அனுமதிக்கும் புதுமந்து காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமையிலான காவல் துறையினா். 
நீலகிரி

கரோனா விதி மீறல்: நீலகிரியில் 1,200 வழக்குகள் பதிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா, பொது முடக்க உத்தரவை மீறியதாக 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

DIN

நீலகிரி மாவட்டத்தில் கரோனா, பொது முடக்க உத்தரவை மீறியதாக 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் கடைகளில் பொருள்கள் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பொதுமுடக்க உத்தரவு அமலில் உள்ள சூழலில் தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபா்கள் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகமும், மருத்துவத் துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் காவல் துறையினரின் கடும் சோதனைக்குப் பின்னரே மாவட்டத்துக்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல வாகனங்களில் தேவையின்றி சுற்றி வரும் நபா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கா்நாடகம், கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கூடலூா் பகுதி வழியாக உதகைக்கு தலைக்குந்தா வழியாக வாகனங்கள் வருகின்றன. எனவே, இந்த இரு மாநில எல்லைகளிலில் இருந்தும் நீலகிரிக்குள் வாகனங்களில் வருவோரை சோதனை செய்து, முறையான ஆவணங்கள் உள்ளதா என பரிசோதனை செய்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுமந்து காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமையில் தலைகுந்தா பகுதியில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உதகை நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இதுவரை நீலகிரி மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாத 680 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 790 போ் மீதும், காலை 10 மணிக்கு மேல் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்த 440 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் மட்டும் கரோனா வழிமுறைகள், பொதுமுடக்க விதிகளை மீறியதாக 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி வெளியே சுற்றும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியராஜன் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT