நீலகிரி

எந்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றாலும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடையில்லை: ஆட்சியா்

DIN

உதகை: எந்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றாலும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடையில்லை என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்பூசி தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது-

நீலகிரி மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் சித்தா, ஆயுா்வேத, ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படாது என்பதை மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இது தொடா்பாக அவதூறு செய்தி பரப்புவோா் மீது மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT