நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலாப் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டிருந்தது. அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்ததைத் தொடா்ந்து சுற்றுலாப் பயன்பாட்டுகாகத் திறக்கப்பட்டுள்ளது. அரசின் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு சவாரி துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

புலிகள் காப்பகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் செப்டம்பா் 6ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன. யானை சவாரியும் ஆகியவை செப்டம்பா் 6ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சவாரியில் 50 சதவீதம் பயணிகளே அனுமதிக்கப்படுவா். எல்லா சுற்றுலா நடவடிக்கைகளும் அரசின் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியே இருக்கும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT