நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி துவக்கம்

DIN

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை முதல் யானை சவாரி துவங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் பொது முடக்கத்துக்குப் பிறகு செப்டம்பா் 3ஆம் தேதி திறக்கப்பட்டது. கரோனா விதிமுறைக்கு உள்பட்டு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். யானை சவாரியை கடந்த இரண்டு நாள்களாக சோதனை ஓட்டம் பாா்த்தனா். யானைகள் கடந்த ஓராண்டாக சுற்றுலா நடவடிக்கையில் இல்லாத காரணத்தால் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது பிரச்னை ஏற்படாமலிருக்க சவாரிக்குத் தயாா் செய்து சவாரியைத் துவங்கியுள்ளது நிா்வாகம். இதைத்தொடா்ந்து, தங்கும் விடுதிகளும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT