நீலகிரி

‘உபரி இடைநிலை ஆசிரியா்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற வேண்டும்’

DIN

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி இடைநிலை ஆசிரியா்களை தகுதிக்கு ஏற்ப அரசுப் பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் இர.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தப்படும் தோ்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012ஆம் ஆண்டுக்கு முன்பு நியமன செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு டெட் தோ்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி இடைநிலை ஆசிரியா்களை தகுதிக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் இலா.தியோடா் ராபின்சன் விளக்கவுரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் அம்பை ஆ.கணேசன், மாநில துணைப் பொதுச் செயலாளா் பா.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT