போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள். 
நீலகிரி

கூடலூரில் பழங்குடியினா் போராட்டம்

கூடலூா் ஸ்ரீமதுரை ஊராட்சியில் பழங்குடி மக்களுக்கு கட்டப்படும் தொகுப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி நீலகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை போராட்டம்.

DIN

கூடலூா் ஸ்ரீமதுரை ஊராட்சியில் பழங்குடி மக்களுக்கு கட்டப்படும் தொகுப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி நீலகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சி.கே.மணி தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குள்பட்ட கொரவயல், குண்டூா், மேலம்பலம், ஓடக்கொல்லி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களில்

அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் பழங்குடி மக்களின் வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டு, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது வரை பணிகள் முடிவடையவில்லை. மேலும், பழங்குடி மக்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கி வருகின்றனா்.

தற்போது, தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால், குழந்தைகளை வைத்துக்கொண்டு குடில்களில்

வசிப்பது சிரமமாக உள்ளது. எனவே, பசுமை வீடுகளை விரைந்து கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.

இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனுவாக வழங்கிய மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT