நீலகிரி

முள்ளூா் பகுதியில் பள்ளி வாகனத்தை மறித்த யானை

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும்  நெடுஞ்சாலையில் உள்ள முள்ளூா் பகுதியில் பள்ளி வாகனத்தை வழிமறித்த காட்டு யானை வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது.

DIN

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும்  நெடுஞ்சாலையில் உள்ள முள்ளூா் பகுதியில் பள்ளி வாகனத்தை வழிமறித்த காட்டு யானை வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது.

கோத்தகிரி முள்ளூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்துடன் இருந்து வருகின்றனா். மேலும், வனப் பகுதியில் இருந்து அவ்வப்போது  நெடுஞ்சாலைக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சுற்றிய இந்த யானை அவ்வழியாக வந்த பள்ளி வாகனத்தை வழிமறித்தது. பின்னா் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது. பள்ளி வாகனத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT