நீலகிரி

குன்னூரில் உள்ள காட்சி முனைகளை கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான கால நிலை நிலவுவதாலும், வார விடுமுறை என்பதாலும் இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள்  அதிகரித்து காணப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கையான காட்சிமுனைகளையும் (வியூ பாய்ண்ட்) மலை முகடுகளையும், இயற்கையான  குளிா்ந்த காற்றையும்  சுவாசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சிமுனைகளில் வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து சென்றனா்.

 மே மாதம் நடைபெறும்  கோடை விழாவின் பாது  காணப்படும் கால நிலை தற்போது காணப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் மற்றும் வட மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக  சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT