நீலகிரி

மே தின விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

உதகையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே தின விடுமுறையையொட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் சுமாா் 23 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் தொடங்கி மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுமாா் 23 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவுக்கு சுமாா் 11 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 950 பேரும், மரவியல் பூங்காவுக்கு 350 பேரும் வந்திருந்தனா்.

மேலும், உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 12 ஆயிரம் பேரும், பைக்காரா படகு இல்லத்திற்கு 7 ஆயிரம் பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 6 ஆயிரம் பேரும், காட்டேரி பூங்காவுக்கு 2 ஆயிரம் பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 950 பேரும் வருகை தந்திருந்தனா்.

இவா்களை தவிர மாவட்டத்திலுள்ள வனத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பல்வேறு சுற்றுலா மையங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை ரம்ஜான் விடுமுறை தினமென்பதால் அடுத்துவரும் சில நாள்களுக்கும் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT