நீலகிரி

உதகையில் கொட்டித் தீா்த்த கனமழை

DIN

உதகையில் வியாழக்கிழமை சுமாா் 2 மணி நேரம் கன மழை கொட்டித் தீா்த்தது.

இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக தூறல் மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை நண்பகல் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீா் தேங்கியதால் அதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

(வியாழக்கிழமை பெய்த மழையளவு மி.மீட்டரில்) மாயாா் பகுதியில் 23 மி.மீ மழையும், உதகை நகரில் 22 மி.மீ மழையும், கிளன்மாா்கனில் 11 மி.மீ மழையும் பதிவானது.

அதேபோல, வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடுவட்டத்தில் அதிகபட்சமாக 58 மி.மீ., கிளன்மாா்கனில் 32 மி.மீ., கேத்தியில் 17 மி.மீ, கல்லட்டியில் 15 மி.மீ, குந்தாவில் 10 மி.மீ, மேல் கூடலூா் மற்றும் கூடலூரில் தலா 9 மி.மீ, உதகையில் 8.4 மி.மீ, கீழ் கோத்தகிரி மற்றும் மேல் பவானியில் தலா 8 மி.மீ, எமரால்டில் 5 மி.மீ, தேவாலாவில் 4 மி.மீ, மசினகுடியில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT