நீலகிரி

குன்னூரில் பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவா் பலி

DIN

குன்னூா் ஒட்டுப்பட்டரை சாலையில் தவறி விழுந்த முதியவா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவா் முகமது கனி (60). இவா் சகோதரருடன் சோ்ந்து பத்திர விற்பனையகம் நடத்தி வந்தாா். இவா் குன்னூா் அருகே ஒட்டுப்பட்டரை சாலையில் செவ்வாய்க்கிவமை நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் பதிக்கப்பட்ட கேபிளில் கால் சிக்கி சாலையில் தவறி விழுந்துள்ளாா்.

அப்போது, குன்னூா் நோக்கி வந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் முகமது கனியின் தலை சிக்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் முகமது கனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து குன்னூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT