உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அவலாஞ்சிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் வியாழக்கிழமை காலை சென்றாா்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு 7 நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கடந்த 3ஆம் தேதி வந்தாா். உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநா் மாளிகையில் தங்கியுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூா் வரை புதன்கிழமை பயணம் செய்தாா். இதையடுத்து உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அவலாஞ்சி பகுதிக்கு குடும்பத்துடன் வியாழக்கிழமை சென்று பாா்வையிட்டாா். ஆளுநா் சென்றதால் சேரிங்கிராஸ், பேருந்து நிலைய சாலை, அவலாஞ்சி செல்லும் சாலையில் ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
உதகையில் தங்கி இருக்கும் ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சென்னை திரும்புவாா் என தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.