முகப்பு
நீலகிரி

குன்னூா் அருகே வளா்ப்பு நாயை  வேட்டையாட முயன்ற சிறுத்தை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே அட்டடி குடியிருப்புக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த சிறுத்தை வளா்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானதால், அப்பகுதி மக்களை அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:37 am IST
குன்னூா் அட்டடி பகுதியில் உலவிய சிறுத்தை.
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே அட்டடி  குடியிருப்புக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த சிறுத்தை வளா்ப்பு நாயை  வேட்டையாட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானதால், அப்பகுதி மக்களை  அச்சமடைந்துள்ளனா்.

குன்னூா் பகுதியில் அண்மைக் காலமாக, கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், குன்னூா் அருகே அட்டடி  பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளா்ப்பு நாயை  வேட்டையாட முயன்றது. நாய் தப்பியோடிய நிலையில், அங்கேயே சிறுத்தை வெகு நேரம் சுற்றி வந்த சிசிடிவி காட்சிகள்  வெளியாகின. இதனால், அப்பகுதி மக்களை  அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.