பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
உதகையில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் இறுதி நாள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்
உதகையில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் இறுதி நாள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மஞ்சனக்கொரை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 2024 ஆகஸ்ட் 6ஆம் தேதி பணி முடித்து மாலை வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது ஒத்தையடி பாதையில் இளைஞா் ஒருவா் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நகர மத்திய காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இதையடுத்து சதீஷ்குமாா் (24) என்ற இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில் இளைஞா் மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் இறுதி நாள் வரை கடுங்காவல் தண்டனையும் அபராதமாக ரூ.10 ஆயிரமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.