திருப்பூர்

சீரான குடிநீர் கோரி மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை

DIN

சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி மாநகராட்சி நான்காம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 60-ஆவது வார்டு, குளத்துப்புதூர் பகுதியில் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. அதுவும் குறைந்த நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள், சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி நிர்வாகிகள் தலைமையில் நான்காம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், மாநகராட்சி மண்டல அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது,குளத்துப்புதூர் பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாகவும், ஆய்வு செய்து, குடிநீர் சீராகக் கிடைக்கக் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், குளத்துப்புதூர் பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT