திருப்பூர்

சமூக அறிவியலில் 2,585 பேர் முழு மதிப்பெண்: கணிதம், அறிவியலில் சரிவு

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 3,614 பேர் பல்வேறு பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், அதிகமாக சமூக அறிவியல் பாடத்தில் 2,585 பேர் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 28,842 பேரில் 27,995 தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மொத்தம் 3,614 பேர் வெவ்வேறு பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெறறுள்ளனர். இதில் 2,585 பேர் சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இரண்டாவதாக கணக்கு பாடத்தில் 542 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். 487 பேர் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை, மொத்தம் 1,535 பேர் வெவ்வேறு பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில், அதிகமாக கணிதத்தில் 670 பேரும்,  அறிவியலில் 644 பேரும், சமூக அறிவியலில் 221 பேரும் முழு மதிப்பெண் பெற்றனர்.
2015-ஆம் ஆண்டில் மொத்தம் 5,927 பேர் வெவ்வேறு பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அவர்களில், அறிவியலில் 3,391 பேரும், சமூக அறிவியலில் 1,339 பேரும், கணிதத்தில் 1,197 பேரும், ஆங்கிலத்தில் 32 பேரும், தமிழில் ஒருவரும் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.
கடந்த 2 கல்வியாண்டுகளை ஒப்பிடுகையில் ஒருவர் மட்டுமே தமிழில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கணிதம், அறிவியலில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT