திருப்பூர்

பல்நோக்கு  இணைய சேவை: ஆலோசனைக் கூட்டம்

DIN

மாநகராட்சி சார்பில் பல்நோக்கு அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதளச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இது குறித்து மாநகராட்சி தனி அலுவலர் மா.அசோகன் கூறியதாவது:
 மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் புதிதாக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இணைய சேவை மூலமாக சொத்து வரி, குடிநீர் இணைப்பு, புதைச் சாக்கடைக்கான இணைப்பு, வரி, வரி இல்லாத இனங்களை வசூலித்தல் போன்றவற்றின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்டல அலுவலக வாரியாக மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி மைய அலுவலத்தில் இருந்து இதன் மூலமாக ஆய்வு செய்யலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT