திருப்பூர்

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு பெற்ற வழக்கு: அக்டோபர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

மாவோயிஸ்டுகள் போலியாக சிம்கார்டு பெற்ற வழக்கு விசாரணை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆர்.ரூபேஷ். இவரது மனைவி சைனா மற்றும் அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிரிவு போலீஸார் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் கடந்த 2015 மே 4-ஆம் தேதி கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.  இதில், ரூபேஷ், சைனா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தபோது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருப்பூர் மாநகர வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT