திருப்பூர்

மண், மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்

DIN

காங்கயம் அருகே,  அனுமதி இல்லாமல் மண், மணல் ஏற்றி வந்ததாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கயம் பகுதியில் கிராவல் மண் மற்றும் ஓடைக்கற்களை சிலர் கடத்துவதாக புகார் எழுந்தததையடுத்து,  காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேல் தலைமையில் வருவாய்த் துறையினர் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். 
இந்த சோதனையின் போது,  முத்தூர் சாலை பகுதியில் வந்த லாரியை  தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.  
இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்தனர். 
இதேபோல கரூர் சாலை-முத்தூர் பிரிவு அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட  3 லாரிகளும் காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT