திருப்பூர்

ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த நைஜீரியருக்கு 6 மாதம் சிறை

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கிருந்த நைஜீரியருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், காதர்பேட்டையில் வசித்து வருபவர் ஜான்சன்(25). நைஜீரியர். இவர், உரிய ஆவணங்கள் இன்றி இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஜான்சனை திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கவியரசன் வியாழக்கிழமை மேற்கொண்டார். 
அப்போது, உரிய ஆவணங்கள் இன்றித் தங்கியிருந்த நைஜீரியர் ஜான்சனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, சென்னை புழல் சிறைக்கு ஜான்சன் அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT