திருப்பூர்

ஹெச். ராஜாவை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

DIN

பெரியார் சிலை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஹெச்.ராஜாவை கண்டித்து காங்கயம் தாலுகாவில் பலவேறு இடங்களில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனக் கூறிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக்  கண்டித்தும் காங்கயம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் முன்னணி,  திராவிடர் கழகம் சார்பில் காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகம், நத்தக்காடையூர், நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  காங்கயம் பகுதி தி.க. ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் அப்புக்குட்டி, புரட்சிகர தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT