திருப்பூர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

DIN

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ளது திருமூர்த்திமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம்  சூழ்ந்துள்ளது. இதனால் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன. 
இங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

SCROLL FOR NEXT