திருப்பூர்

அவிநாசி கோயில் உண்டியலில் ரூ.12.52 லட்சம் காணிக்கை

DIN

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில், 107 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளியுடன் ரூ.12லட்சத்து 52ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
 அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி தேக்கம்பட்டி உதவி ஆணையர் ராமு முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆய்வாளர் சண்முகசுந்தரம், கோயில் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
 இதில் அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகையம்மன், சுப்பிரமண்யர், விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் உள்ள 15 உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் ரூ.12 லட்சத்து 52 ஆயிரத்து 371, 107 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT