திருப்பூர்

வெள்ளக்கோவிலுக்கு 10 டன் முருங்கைக் காய் வரத்து

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 10 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக் காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் 76 விவசாயிகள் மொத்தம் 10 டன் முருங்கைக் காய்களை கொண்டு வந்திருந்தனர். இவற்றை வாங்குவதற்காக 8 வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் மர முருங்கைக்காய் கிலோ ரூ.15, செடி முருங்கைக்காய் ரூ.20, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.20 விலைக்கு வியாபாரிகள் வாங்கினர். 
கடந்த வாரம் 11 டன் வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்த நிலையில் விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT