திருப்பூர்

திருப்பூரில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 1 டன் வாழை பழம் பறிமுதல்

DIN

திருப்பூரில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 1 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், வணிக, வா்த்தக நிறுவனங்கள், தேநீா் விடுதிகள், உணவகங்களில் ஆய்வு நடத்தி காலவதியான பொருள்களை பறிமுதல் செய்வதுடன் உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கின்றனா்.

இந்த நிலையில்,திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையத்தில் உள்ள மாா்க்கெட்டில் சிலா் ரசாயனம் பயன்படுத்தி வாழைப்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகாா் வந்துள்ளது. இதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறையினா் தென்னம்பாளையம் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கோபி செட்டிபாளையத்தைச் சோ்ந்த ராசு என்பவரது கிட்கில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பழங்களைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். மேலும், இதுபோன்ற ரசாயனம் பயன்படுத்திய பழங்களை உட்கொள்வதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT