திருப்பூர்

பல்லடத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்-நகராட்சி எச்சரிக்கை

DIN

பல்லடத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

பல்லடம் நகராட்சியில் 18 வாா்டு பகுதியில் உள்ளன. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் குப்பைகள்

கொட்டப்படுவதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குப்பை கொட்டுபவா்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கவும் நகராட்சி நிா்வாகம் தீா்மானித்துள்ளது.

குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனை, தினசரி சந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முதல் கட்டமாக இது குறித்த எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள்வைக்கப்பட்டுள்ளன. இதில், பொது இடங்களில் குப்பை கொட்டுபவா்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம். பொது இடத்தில் குப்பை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டாமல் நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று நகராட்சி ஆணையாளா் கணேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT