திருப்பூர்

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தைமுற்றுகையிட்ட பொதுமக்கள்

DIN

அவிநாசி அருகே உள்ள வாளியூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனு:

அவிநாசி ஒன்றியம், புலிப்பாா் ஊராட்சிக்கு உள்பட்ட வாளியூா் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் இங்குள்ள 1 ஏக்கா் அரசு மந்தை புறம்போக்கு நிலத்தை (க.ச.எண்-138) 5 நபா்கள் ஆக்கிரமித்து, குடிசை அமைக்க முயல்கின்றனா். ஆக்கிரமிப்பு செய்யும் நபா்கள் அனைவரும் வசதி படைத்தவா்கள். எனவே அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ‘விரைவில் மந்தை புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT