திருப்பூர்

நிழல்கள் சேவைத் திட்டங்கள் விரிவாக்க கூட்டம்

DIN

வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளையின் சேவைத் திட்டங்கள் விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மூலனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அறக்கட்டளை தலைவர் ஆர்.சக்திகுமார் வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளை செயலாளர் அ.மகாதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகராஜ், பொருளாளர் மனோஜ், நிர்வாகி அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 2019 ஆம் ஆண்டின் முதல் கூட்டமான இதில் நடப்பு ஆண்டு செய்ய வேண்டிய சேவைகள், பெறப்பட்ட நிதி ஆதாரத்தைக் கொண்டு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், புதிய வாய்ப்புகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் இப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகள் செய்யவும், ரசாயனப் பொருள்கள் தவிர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
 சிறந்த உறுப்பினர்களுக்கு செம்மாண்டம்பாளையம் ராஜலிங்கம் பரிசுகள் வழங்கினார். அறக்கட்டளை பொறுப்பாளர்கள் ஜவஹர், சந்திரசேகரன், ஜெகன், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT