திருப்பூர்

தாராபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் சாவு

DIN

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் 3 வயதுச் சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி (62). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது மனைவி ஜோதிமணி, மாமனார் நாச்சிமுத்து (75), பேரன் செல்வமித்ரன் (3) ஆகியோருடன் உடுமலையில் உள்ள இளைய மகள் வீட்டுக்கு காரில் புதன்கிழமை சென்றுள்ளார்.
பின்னர், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். காரை முத்துசாமி ஓட்டிச் சென்றார். இவர்களது கார் கொண்டரசம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜோதிமணி, நாச்சிமுத்து, செல்வமித்ரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
நீரில் மூழ்கி இருவர் சாவு: நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்தவர் பென்ஸ்டிபன் (26). இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள புதிய அமராவதி ஆற்றுப்பாலம் அருகே புதன்கிழமை குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தாராபுரம் மேற்கு தாசர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் நல்லவநாயக்கன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் புதன்கிழமை குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT