திருப்பூர்

மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

DIN

சேவூரை அடுத்த மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தை தேர்த் திருவிழா 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக தேராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  திருத்தேர் ரதவீதிகள் வழியாக வந்து மாலை 3.30 மணிக்கு தேர்நிலையை அடைந்ததது. திங்கள்கிழமை பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடும், ஜனவரி 22 ஆம் தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி புதன்கிழமை மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனை ஆகியவையுடன் விழா பூர்த்தியடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT