சிவன்மலை முருகன் கோயிலுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து அழைத்துவரப்பட்ட மாடு
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள் சிவன்மலை முருகன் கோயிலில் ரூபாய் நோட்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள் சிவன்மலை முருகன் கோயிலில் ரூபாய் நோட்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், படியூர், ஓலப்பாளையம், காடையூர், எல்லப்பாளையம், வரதப்பம்பாளையம், குண்டடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தைப்பூச விரதமிருந்து, காவடி எடுத்து, பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊதியூர் அருகே, தீத்தான்வலசுப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் காவடி எடுத்து வந்தனர். மாட்டின் கொம்புகள், உடல் முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.