திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்
இராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரக தலங்களில் ராகு பரிகார தலமாக உள்ளது. இங்கு வைகாசி விசாக பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளினர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Vaikasi Visakam grand festival celebrated in a spectacular manner at Thirunageswaram Temple.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.