திருப்பூர்

காங்கயத்தில் 174 பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம்

DIN


காங்கயத்தில் 174 மகளிர்க்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,  என்.எஸ்.என்.நடராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெங்கு என்கிற மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு,  காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த 174 மகளிருக்கு ரூ. 43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை வழங்கிப் பேசினார். விழாவில் காங்கயம், வெள்ளகோவில் பகுதி அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT