திருப்பூர்

திருப்பூரில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு  படையினர் கொடி அணிவகுப்பு

DIN


திருப்பூரில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை  கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 398 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மாநகர் பகுதிகளில் 160 வாக்குச்சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 238 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர்  83 பேர்  வெள்ளிக்கிழமை திருப்பூர் வந்தனர். 
இதையடுத்து, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 68 பேர், ஆயுதப்படைக் காவலர்கள் 50 பேர், உள்ளூர் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் 53 பேர் என மொத்தம் 171 பேர் இந்தக் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர். 
கொடி அணிவகுப்பானது டவுன்ஹாலில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கல்யாணி பெட்ரோல் பங்க் அருகே நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT