திருப்பூர்

பஞ்சலிங்கம் அருவியில்  நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

DIN

உடுமலையில் பெய்த கனமழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வியாழக்கிழமை அதிகாலை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. 

இதைத் தொடர்ந்து வெய்யிலின் தாக்கம் குறைந்து நகரில் பகலில் குளிர்க் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலை நகரைப் போலவே அருகில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் மழை பெய்தது.

உடுமலை அருகே புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அன்றாடம் வருகின்றனர். 

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த கன மழையால் பஞ்சலிங்கம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வியாழக்கிழமை இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்கம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT