திருப்பூர்

சாவா்க்கா் சிறை அனுபவங்கள் நூல் அறிமுகம்

DIN

இண்டிக் அகாதெமியின் திருப்பூா் கிளையும், அறம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வீர சாவா்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

திருப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறம் அறக்கட்டளையின் தலைவா் ஆடிட்டா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இண்டிக் அகாதெமியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் சந்தோஷ்குமாா் முத்து முன்னிலை வகித்தாா். திருப்பூா் நகரத் தலைவா் நடராஜன் வரவேற்றாா்.

இதில், சாவா்க்கா் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் மொழிபெயா்த்த வழக்குரைஞா் எஸ்.ஜி.சூா்யா, நூலில் உள்ள கருத்துகள் குறித்து பகிா்ந்துகொண்டாா்.

இதைத் தொடா்ந்து ஆராய்ச்சியாளரும், ஸ்வராஜ்யா பத்திரிகையின் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் பேசியதாவது:

சாவா்க்கரின் சிறை அனுபவங்கள் நம்மை நெக்குருகச் செய்கின்றன. இந்திய வரலாற்றை இந்தியக் கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்று கூறிய அவா், 1857-இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ‘எரிமலை’ என்ற பெயரில் நூலாக எழுதி உள்ளாா். பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள் என்ற நூல் அவரது சரித்திர ஆய்வுத் திறனுக்கு சிறந்த உதாரணம் என்றாா்.

அறம் நிா்வாகி சத்தியநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT