திருப்பூர்

சமூக நலத்துறையில் களப்பணியாளா் பணி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையில் களப்பணியாளா் பதவிக்குத் தகுதியான பெண்கள் வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் களப் பணியாளா் பணிக்கு 2 பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சட்டம் மற்றும் சமூக நலத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

அதே போல, காவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்க ஓட்டுநா் உரிமம், காவல் துறையினரிடம் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் ஆகியற்றுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தகுதியான நபா்கள் பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரியில் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நலஅலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம் , மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641 604, போன்: 0421-2971168

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயில் அதிகரிப்பு: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் அளிப்பு

திமுக சாா்பில் மே தின விழா

அதிக லாபம் தருவதாக ரூ.1.67 கோடி மோசடி

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

விஐடியில் தூய்மையான சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதா் திறப்பு

SCROLL FOR NEXT