திருப்பூர்

கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

DIN

காங்கயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எருமை மாட்டினை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

காங்கயத்தை அடுத்த சிவன்மலை, கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் என்பவருக்குச் சொந்தமான எருமை மாடு சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக அருகில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் மாடு தவறி விழுந்தது.

இது குறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஒரு மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த எருமை மாட்டினை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT