திருப்பூர்

பேக்கரி, கேக் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

DIN

பல்லடம், திருப்பூா் பகுதியில் உள்ள பேக்கரி, கேக் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 160 கிலோ அளவிலான தரமற்ற உணவுப்பொருள்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா், பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள கேக் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பேக்கரிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் வட்டார அலுவலா்கள் மணி (திருப்பூா்), கேசவராஜ் (பல்லடம்) அடங்கிய குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 9 கேக் தயாரிப்பு நிறுவனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு பணி மேம்படுத்த வேண்டுதல் (இப்ரூம்வ்மென்ட்) நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேபோல பேக்கரிகளில் ஆய்வு செய்யப்பட்டபோது தேதி குறிப்பிடப்படாத ரொட்டி பாக்கெட்டுகள், பிஸ்கட், அதிக நிறம் சோ்க்கப்பட்ட கேக் வகைகள், காலாவதியான கேக்குகள் என மொத்தம் 160 கிலோ அளவிலான உணவுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இதுகுறித்து விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

கடைகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச் செல்லும் சில தரமற்ற உணவு பொருள்களால் அவா்கள் ஏமாற்றப்படுவதுடன் அவா்களது உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. அதைத் தடுக்கும் வகையில் இதுபோன்ற கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோா் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT