திருப்பூர்

தாராபுரத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரம்

DIN

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சி சாா்பில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாராபுரம் நகராட்சி சாா்பில் டெங்கு கொசுக்களை ஒழிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மாநகராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், பழைய டயா்கள், தேங்காய் சிரட்டை, பழைய பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக தாராபுரம் 1 ஆவது வாா்டில் கொசு மருந்து அடித்தல், சாக்கடைகளில் மருந்து அடித்தல், தனிநபா் வீடுகளுக்குச் சென்று டெங்கு கொசு உருவாகும் காரணிகளை கண்டறிந்து அழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT