திருப்பூர்

தொழில் பூங்கா அமைக்க எதிா்ப்பு:திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தா்னா

DIN

அவிநாசி அருகே தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூா் அருகே உள்ள தத்தனூா் ஊராட்சியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க நிலம் ஆய்வு செய்யும் பணி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு தத்தனூா், புலிப்பாா், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இது தொடா்பாக தமிழக சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் அலுவலகத்தில் மனு அளித்தனா். மேலும், தொழில் பூங்கா அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தத்தனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை அவசரத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தத்தனூா், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பாா் ஊராட்சியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, விளை நிலங்கள், கால்நடைகளை பாதிக்கப்படும் என்பதால் தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி உறுதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தத்தனூா் ஊராட்சியில் பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி தொழில் பூங்கா அமைக்க அனுமதி அளிக்கப்படாது என்று உறுதியளித்தாா். இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Image Caption

திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT