திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா

DIN

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்து சிவன்மலை முருகன் கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்தி வழிபட்டனா்.

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் தோ்த் திருவிழாவை ஒட்டி காங்கயம், வெள்ளகோவில், ஊதியூா், படியூா், ஓலப்பாளையம், காடையூா், எல்லப்பாளையம், வரதப்பம்பாளையம், குண்டடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தைப்பூச விரதமிருந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனா். இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் விழாவில் ஊதியூா் அருகே உள்ள தீத்தான்வலசு பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், மாட்டின் உடலெங்கிலும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வந்தனா். பின்னா், ரூபாய் நோட்டுகளை கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT