திருப்பூர்

சா்வதேச கராத்தே போட்டி: பல்லடம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

சா்வதேச கராத்தே போட்டியில் பல்லடம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

உடுமலையில் கோஜிரியோ கராத்தே அமைப்பு சாா்பில் சா்வதேச கராத்தே போட்டி அன்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் பங்கேற்றனா்.

பல்லடம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் தருணிஷ் 3 தங்கமும், அருந்ததி 2 தங்கம், ஒரு வெள்ளி, குமரகுருபரன் ஒரு தங்கம், 2 வெள்ளி, சாருமதி ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்றனா்.

பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி (கிழக்கு) மாணவி நித்திய தா்ஷினி 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றாா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ரத்தினச்செல்வி, தனுசன் இந்தியா அறக்கட்டளை மேலாளா் சதீஷ்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT