திருப்பூர்

திருப்பூரில் தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது செயல்பட்ட டாஸ்மாக் பார்: உரிமையாளர் மீது வழக்கு

DIN

திருப்பூரில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தின்போது சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுதிருப்பூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பூலுவபட்டி சுற்றுச்சாலையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் விதிகளை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. 

இதுதொடர்பாக விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும், தனியார் தொலைகாட்சிகளிலும் வெளியானது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பறக்கும்படை குழுவினருக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டார். இதன்பேரில் பறக்கும்படை குழுவினர் சம்மந்தப்பட்ட பாருக்கு சென்று பார்த்தபோது மது விற்பனை செய்த நபர்கள் பாரை மூடிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக டாஸ்மாக் மண்டல மேலாளர்  செளந்தரபாண்டியன் பரிந்துரையின் பேரில் சம்மந்தப்பட்ட பார் உரிமையாளர் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக ஆய்வில் ஈடுபட்ட பறக்கும்படை குழுவினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT