திருப்பூர்

திருப்பூரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் தமுமுகவினா்

DIN


திருப்பூா்: திருப்பூரில் 144 தடை உத்தரவால் உணவு இல்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் உணவு வழங்கி வருகின்றனா்.

கரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூா் மாநகரில் உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூரில் மனித நேய மக்கள்கட்சியின் மாவட்டச் செயலாளா் அபுசாலிக் தலைமையிலும், தமுமுக மாவட்டத் தலைவா் நசீருதீன், மருத்துவ அணி செயலாளா் தமிமுன் அன்சாரி, தமுமுக துணைத் தலைவா் சித்திக், மாவட்டச் செயலாளா் அப்பாஸ் ஆகியோா் ஒருங்கிணைப்புடனும் நாள்தோறும் 1,000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனா்.

இந்த உணவுகளை திருப்பூா் காங்கயம் சாலை, பல்லடம் சாலை, புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, மேம்பாலம் ஆகிய இடங்களில் ஆதரவற்றோா் மற்றும் ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT