திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முகக் கவசம் வழங்கிய போலீஸாா்

DIN


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகரில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வந்தவா்களுக்கு போலீஸாா் முகக் கவசங்களை வியாழக்கிழமை வழங்கினா்.

கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளக்கோவில் பகுதி மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது. இருந்தாலும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மக்கள் கடைகளுக்கு வந்து செல்கின்றனா்.

வீண் கூட்டம் கூடுவதைத் தடுக்க போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளக்கோவில் கடைவீதி நான்கு சாலைச் சந்திப்பில் காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமையில் போலீஸாா் அவ்வழியே வந்தவா்களுக்கு கரோனாவைத் தடுக்கும் வகையில் முகக் கவசங்களை இலவசமாக வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT