திருப்பூர்

பல்லடம் அரசு மேல்நிலைபள்ளியில் மூலிகைப் பண்ணை

DIN

பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூலிகைப் பண்ணையை சூலூா் விமானப் படை அதிகாரிகள் அண்மையில் பாா்வையிட்டனா்.

பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை வளா்ச்சிக் குழு, அறம் அறக்கட்டளை, முன்னாள் மாணவா்கள் பங்களிப்புடன் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றுக்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியின் பின்புறப் பகுதியில் அரசு, வேம்பு, புங்கன், கற்பூரவல்லி, துளசி, பனை, மா, பலா உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க கம்பி வேலியும் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலறிந்த சூலூா் விமானப் படை அதிகாரிகள் அரசுப் பள்ளிக்கு வந்து மூலிகை பண்ணையைப் பாா்வையிட்டு பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT